முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட “சக்வல 280 வது ஸ்மார்ட் வகுப்பறை (SMART CLASS ROOM)” கையளிக்கும் நிகழ்வு இன்று (03) புதன்கிழமை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.ஆர்.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அழைப்பின் பேரில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான சஜீத் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வகுப்பறையை திறந்து வைத்ததுடன், மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறையை கையளித்தார்.
இதில் கெளரவ அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, முன்னால் ஆளுனர் எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மெளலானாவின் பிரதிநிதியாக அவரது புதல்வர் அம்ஜத் மெளலானா மற்றும் விஷேட அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.ஜவாத், பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தகர்கள், கட்சி ஆதரவாளர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மாணவச்செல்வங்கள் ஸ்மார்ட் உலகிற்கு அச்சமின்றி அடியெடுத்து வைக்க உதவும் நோக்கில் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவில் சுமார் நான்கு வருடங்களாக “பிரபஞ்சம்” ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 கணணிகள், ஒரு ஸ்மார்ட் போர்ட், பிரிண்டர் உள்ளடங்கலான குறித்த ஸ்மார் வகுப்பறைக்காக சுமா ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக பாடசாலையின் வாசிகசாலை ஆங்கில நூல்கள் கொள்வனவுக்காக ஒரு இலட்சம் நிதியும் நிகழ்வின் போது சஜீத் பிரேமதாஸவினால் கையளிக்கப்பட்டது.
( எஸ்.எம்.எம்.முர்ஷித், எம்.எச்.எம்.இம்றான் )
No comments:
Post a Comment