அண்மையில் வெளியான 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக இலங்கையின் அரச பல்கலைக்கழக இளமானிக்கற்கைநெறிகளிற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) இனால் 2023/24 கல்வியாண்டுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கொன்று சம்மாந்துறை நலனுக்கும் அபிவிருத்திக்குமான பேரவை (SWDC) இன் பங்களிப்புடனும் சம்மாந்துறை இளமானிப்பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டிலும் நேற்று முன்தினம் (11) அல்-மர்ஜான் முஸ்லீம் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் வளவாளர்களாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப்.எச்.ஏ.சிப்லி அவர்களும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீட விரிவுரையாளர் எம்.பர்விஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
நிகழ்வின் அறிமுக உரையினை சம்மாந்துறை இளமானிப்பட்டதாரிகள் அமைப்பின் தலைவரும் மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவருமான எம்.எஸ்.ஹினாஸ் அஹமட் நிகழ்த்தியதுடன் மேலும் உரையில் “இதன் தொடர்ச்சியாக எதிர் வருகின்றன நாட்களில் நிகழ் நிலை விண்ணப்பம் நிரப்பும் நிகழ்வானது, அத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த இளம்பட்டதாரி மாணவர்களால் இலவசமாக வழங்கி வைக்கப்படும்“ எனவும் கூறியிருந்தார்.
டெலிக்ராம் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
இக் கருத்தரங்கில் 2023/2024 கல்வியாண்டிக்கான பல்கலைக்கழக கற்கை நெறிகளிற்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ள மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment