இணையம் ஊடாக சீன நிறுவனமொன்றுக்கு நேரடி பாலியல் காட்சிகளை அனுப்பி பாரியளவிலான பணம் சம்பாதிக்கும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், பிலியந்தலை, கொங்கஹவத்த வீதிப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளம் ஜோடிகளிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொள்ளுப்பிட்டியில் வசிக்கும் இளம் தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் மொரட்டுவையில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
பொலிஸ் சோதனையின் போது, மற்றொரு ஜோடி இங்கு இருந்ததாகவும், அவர்களும் இந்த மோசடிக்கு நேரடியாக பங்களித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
22, 23, 26, 27 வயதுடைய சந்தேக நபர்களான கணவன் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment