“இயற்கையை அழகுபடுத்த நாளைய சுவாசம்” என்ற தலைப்பில் 24வது கெமுனு சேவா படைப்பிரிவின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஷெல்டன் பெரேரா இலங்கையை கால்நடையாக சுற்றி வருவதற்கு தீர்மானித்திருக்கின்றார்.
இதன் முதற்கட்டமாக கடந்த 22 ஆந்திகதி திங்கட்கிழமை மத்திய முகாம் லும்பினி கோவிலுக்கருகில் காலை தனது நடைப்பயணத்தை ஆரம்பித்தார்.
வட்சப் சேனல் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
மகா சங்கரத்தினரின் ஆசியுடன் பயணத்தை தொடங்கிய அவர், 53 நாட்களுக்குள் இப்பயணத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
அத்துடன், இந்நடைப்பணத்தின் ஆரம்பமாக மத்திய முகாம் லும்பினி ஆலய முன்றலில் கூட்டம் நடைபெற்றது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வருகை தந்து இந்நடைப்பயணத்தில் ஈடுபடும் 24வது கெமுனு சேவா படைப்பிரிவின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஷெல்டன் பெரேராவிற்கு மாலையணிவித்து ஆசிர்வதித்தனர்.
வட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
நான்கு காரணங்களின் அடிப்படையில் இந்நடைபயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
அனைத்தினங்கள் மற்றும் அனைத்து மதத்தினரிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஊக்குவித்தல்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளை ஒழித்தல்.
உடலாரோக்கியத்துடன் அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருத்தல்.
இயற்கையின் அழகை அழகுபடுத்த நாளைய சுவாசம் என்ற தலைப்பில் ஒவ்வொரு நாளும் பயணத்தின் தொடக்கத்தில் ஒரு செடியை நடுவது இந்நடைப்பயணத்தின் அடிப்படையாக இருந்து வருகிறது.
டெலிக்ராம் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
கடந்த 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாதயாத்திரை கல்முனைக்குச்சென்று அங்கிருந்து கடல் மார்க்கமாக பயணிக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயணம் முதல் நாள் காத்தான்குடியில் நிறைவடைந்து அங்கிருந்து அன்றைய தினம் காத்தான்குடியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் நிறுத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயணம் ஒரு நாளைக்கு 10 மணி நேரமாகும் என்பதுடன், இப்பயணத்தை 52 நாட்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
( பாறுக் ஷிஹான் )
No comments:
Post a Comment