சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து செல்லவுள்ள ஓட்டமாவடி மாணவி ரணா சுக்ரா ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 February 2024

சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து செல்லவுள்ள ஓட்டமாவடி மாணவி ரணா சுக்ரா !



ஓட்டமாவடி-01  கிராம உத்தியோகத்தர் 208 B/2 பிரிவில் இயங்கும் நியுடலண்ட் சிறுவர் கழகத்தின் தலைவியும் , கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக சிறுவர் சபையின் செயலாளரும்,  மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபை செயலாளர் மற்றும் தேசிய சிறுவர் சபையின் இணைச் செயலாளருமான  மட்/மம ஓட்டமாவடி பாத்திமா பாலிஹா மகா வித்தியாலய மாணவியுமான முகம்மது இஸ்மாயில் (காவத்தமுனை காகிதநகர் மில்லத் வித்தியாலய அதிபர்) அவர்களின் மகளுமான ரணா சுக்ரா  அவர்கள் பூட்டான் நாட்டில் நடைபெற இருக்கும்  சார்க் உச்சி மாநாட்டின் ஒரு அங்கமான  தெற்காசிய சிறார்கள் எதிர் நோக்கும் சமகால சவால்கள் தொடர்பாக எதிர்வரும் 27, 28.02.2024 ம் திகதிகளில் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் பங்கு கொள்வதற்காக இலங்கையின் பிரதிநிதியாக  செல்ல உள்ளார்.


அத்தோடு இவர் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகூறல் போட்டியில் தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட்சப் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

இவரது தந்தையும் பல தேசிய சர்வதேச விருதுகளுக்கு சொந்தக் காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் மாணவிக்கு  எமது இலங்கை தமிழக குரல் குடும்பத்தின் சார்பாகவும், ஊர் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .

 


                                       ( எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்(JP) )

No comments:

Post a Comment

Post Top Ad