இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76வது சுதந்திர தின விழா சம்மாந்துறை அஷ்ஹேரியன் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றைய (4) தினம் சம்மாந்துறை கைகாட்டி சந்தியில் விமர்சையாக நடைபெற்றது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
இந் நிகழ்வில் வருகை தந்த அதீதிகளால் தேசிய கொடி ஏற்றபட்டதுடன் , ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய பிரதி தலைவர் அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதீதி உரை ஆற்றியதோடு, கௌரவ அதீதி உரையினை கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.ஐ. ரனூஸ் நிகழ்த்தியதுடன், தொடர்ந்தும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம் அதீதி உரையினையும் நிகழ்த்தினார்.
மேலும் நிகழ்வுக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபர், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சரீபா, தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கலாசாலையின் தலைவர் அஷ்-ஷேய்க் இஸ்மாலெப்பை, SLMC STR இளைஞர் காங்கிரஸின் தலைவரும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்யாலய ஆசிரியர் ஹாதிக் இப்ராஹிம், அமைப்பின் ஆலோசாகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(ஏ. கே. ஹஷான் அஹமட்)
No comments:
Post a Comment