இலங்கையில் இனவாத அரசியல்வாதிகளினால் சீர்குலையும் தமிழ் மக்களும் நாடும். நேற்று முன் தினம் (06-12-2023) ஆம் திகதி இடம் பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்
தொல்பொருள் சார்ந்த அமைச்சரை பற்றி கதைப்பதில் இங்கு எவ்வித பிரயோசனமும் இல்லை அவர் ஓர் இனவாதி அவர் அவரின் செயற்பாடுகள் அனைத்தும் இனவாதமான செயல்பாடாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது .
இவ் தொல்பொருள் திணைக்களம் மற்றும் இதனுடன் சம்பந்தமான காணி அபகரிப்பு இவ்வாறான விடயங்கள் தொடர்பாக நாம் அமைச்சர்களுடன் மற்றும் ஜனாதிபதியுடன் பேசியும் எந்த பயனும் இல்லாத காரணத்தினால் எமது தமிழரசு கட்சியினை சேர்ந்த M.A சுமந்திரன் அவர்கள் நீதிமன்றத்தை நாடி இருந்தார்.
ஆனாலும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியே நியாயமான தீர்பின் காரணமாக நாட்டை விட்டு அகதியாக தப்பிச் செல்ல வேண்டிய துப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் நீதிமன்ற உத்தரவுகளையும் தாண்டி மிகப் பாரதூரமான இனவாத செயற்பாடுகளில் தற்பொழுதும் ஈடுபட்டு வருகின்றார்.
எங்கு மலை இருந்தாலும் அதனை கையக படுத்த முயல்கிறார். இராணுவத்தினரின் துணையோடு பல அட்டூழியங்களை மேட்கொல்கின்றார். எனது கோரிக்கையாதெனில் இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பை நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இவ் உயரிய சபையில் கேட்டுக்கொள்கின்றேன்.
அடுத்த முக்கியமான விடயம் வடகிழக்கை ஒப்பிடும் போல அதிலும் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் உல்லாச பயணிகளின் வருகையும் உல்லாச பிரயாண துறைக்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. அதிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையானது மிகவும் மந்த நிலைமையிலேயே இப்பிரதேசத்தில் காணப்படுகின்றது. மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு உல்லாச பிரயாண துறைக்கு பொறுப்பாக உள்ள A P மதன் அவர்கள் இனால் கொண்டுவரப்பட்ட முதலைகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்குரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் மட்டக்களப்பில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமான பாசிக்குடாவில் அமைந்துள்ள உல்லாச விடுதி பகுதிகளிலும் சரி அவற்றுடன் அண்டிய பகுதிகளிலும் சரி சோலார் மூலம் இயங்கும் மின்கலங்கள் இயங்காமல் செயலற்று காணப்படுகின்றது அவற்றினை புனர் நிர்மாணம் செய்யவும் நிதி ஒதுக்கப்படல் என்பது மிகவும் அத்தியாவசியமாகும்.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.
இங்கு இவை மட்டுமல்ல பல பாரிய பிரச்சனைகளும் காணப்படுகின்றது இவற்றினை நான் இங்கு ஒவ்வொன்றாக வரிசைப்படுத்துவதை விட மாவட்டத்தை எவ்வாறு உல்லாச பிரயாண துறையில் அபிவிருத்தி அடைய வைக்கலாம் என்பது பற்றி அவ் மாவட்ட உல்லாசத்துறை சங்கங்களுக்கு பொறுப்பாக உள்ள அதனோடு சம்பந்தப்பட்ட நிரோஷன் அவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் கூட்டங்களை ஒழுங்குப்படுத்தி மாவட்டத்தை எவ்வாறு சுற்றுலாத்துறைக்கு ஏற்றபடி முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்லக்கூடிய வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடி அதற்கான வழிமுறைகளை செய்யலாம் என்பதை இங்கு நான் கூறிக் கொள்கிறேன். மூலம் கணிசமான வருமானத் தினையும் எமது நாடானது பெற்றுக் கொள்ள முடியும்
அதேபோல் மட்டக்களப்பில் காணி தொடர்பிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றது. இங்கு திறம்பட செயல்பட்ட LRC சேர்மன் மிகவும் சரியான முறையில் செயல்பட்டவர் அவரை தற்சமயம் ஜனாதிபதி இடமாற்ற கூறியிருப்பதாக அறிய கிடைக்கின்றது. அதேபோல் இங்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் காணி தொடர்பான பல பிரச்சினைகள் காணப்படுகின்றது ஆனால் இவற்றினை அதற்குரிய அமைச்சர் நிவர்த்தி செய்வது என்பது இயலாத காரியம் அதனால் தான் நாங்கள் எப்பொழுதும் வலியுறுத்தி கூறிக்கொண்டு வருகின்றோம் காணி தொடர்பான உரிமையை அதிகார பகிர்வை நமது மாகாண சபைக்கு வழங்கி மாகாண சபை மூலம் இவற்றினை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன் எடுக்க வேண்டும்.
மற்றும் இலங்கை ஒவ்வொரு முறையும் வெளியிடும் அதாவது உல்லாச பிரயாணத் துறை மூலம் கிடைக்கப்படும் வருமான பற்றிய தகவல்கள் அவர்களின் எண்ணிக்கை போன்றவை மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது பிழையானதாக காணப்படுகின்றது அவற்றின் உண்மை தன்மையினை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்தி உள்ளேன். அதனை அமைச்சர் அவர்களும் ஏற்றுக் கொண்டார் இவை தொடர்பான புதிய பொறிமுறை ஒன்றையும் இனிவரும் காலங்களில் கைக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment