மட்டக்களப்பு கல்லடி- உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (30) கல்லூரி நடராஜானந்தா மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி நவகீத்தா தர்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லடி- உப்போடை ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜீ ஆன்மீக அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி ஜே.ஜே.முரளீதரன் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சாமினி ரவிராஜ் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர்.ஜே.பிரபாகரன், பாடசாலை பழைய மாணவர் சங்கச் செயலாளர் செயலாளர் வைத்தியர் திருமதி பி.சசிகுமாரன், மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.லவகுமார் மற்றும் பாடசாலை அபிவித்திக் குழுச் செயலாளர் பி.வேந்திரராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவிகள், க.பொ.த சாதாரணதரத்தில் 9ஏ, 8ஏ சித்தி பெற்றவர்கள், க.பொ.த (உயர்தரப்) பரீட்சையில் சித்தி பெற்று, பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவிகள் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கிப் பாராட்டப்பட்டனர். அத்தோடு ஆசிரியர்களும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பரிசளிப்பு விழாவில், வரவேற்பு நடனம், ஆங்கிலப் பாடல், ஜோடி நடனம், நாடகம், மும்மொழிப் பாடல் போன்றன அரங்கேறின.
No comments:
Post a Comment