நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து இன்றும் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 December 2023

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து இன்றும் !

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

27,000 தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட்சப் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது இந்த வேலை நிறுத்தத்தின் மற்றுமொரு நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் நேற்று பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நாளை (12) நள்ளிரவு வரை தொடரும்.

No comments:

Post a Comment

Post Top Ad