மட்டக்களப்பில் கொட்டித் தீர்க்கும் கனமழை- மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதி ஊடாக பாய்ந்தோடும் வெள்ள நீர் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 December 2023

மட்டக்களப்பில் கொட்டித் தீர்க்கும் கனமழை- மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதி ஊடாக பாய்ந்தோடும் வெள்ள நீர் !



மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


சில பகுதிகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகளும் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


களுவாஞ்சிகுடி நவகிரி நீர்பாசன தினைக்கள பொறியலாளர் S.கிசோக்காந்தின் ஆலோசனைக்கு அமைவாக நேற்று(15-12-2023)ஆம் திகதி  நவகிரிக் குளத்தின் ஒரு வான் கதவு, 1 அடி திறந்து விடப்பட்டுள்ளது.


வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.

இதன்காரணமாக இன்று(16-12-2023)ஆம் திகதி  மட்டக்களப்பு – வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


இவ்வீதியின் ஊடாக போக்குவரத்துச் செய்வோர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


நவகிரிக் குளத்தின் வடிச்சல், வாய்க்கால்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad