மட்டக்களப்பு குருக்கள்மட இராணுவ முகாமில் ஓர் பகுதி அளவில் விட்டுத் தருவதாக உறுதி-இரா.சாணக்கியன் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 December 2023

மட்டக்களப்பு குருக்கள்மட இராணுவ முகாமில் ஓர் பகுதி அளவில் விட்டுத் தருவதாக உறுதி-இரா.சாணக்கியன் !

 

பாராளுமன்ற அமர்வின் போதான கேள்வி பதிலின் போது இன்று (12-12-2023) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களே குருக்கள்மட இராணுவ முகாம் பற்றி நாம் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி அதில் ஓர் பகுதி அளவில் விட்டுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்கள்.


 இதனை நீங்கள் துரிதப்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.


வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.


அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காயன்கேணி பிரதேசத்தில் புதிதாக ஓர் காணியினை இராணுவம் தன் வசப்படுத்தும் திட்டம் உள்ளதாக அறிந்தோம்.


அதே போல் பாலையடி வட்டை இராணுவ முகாமில் ஓர் பகுதியை அவ் ஊர் மக்கள் மலசலம் அமைப்பதக்காக கேட்கின்றார்கள்.


இவற்றினையும் கருத்தில் கொண்டு இவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


மட்டக்களப்பில் இவ்வாறாக பல காணிகள் காணப்படுகின்றது இவற்றினை விடுவிக்க ஜனாதிபதியடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன் அவற்றை உங்களிடமும் முன்வைக்கின்றேன்  எமது மாவட்டத்தில் விடுவிக்கப்படவேண்டிய இடங்களை ஆராய்வதற்கு ஓர் குழு ஒன்றை அமைத்து ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்.

நீங்கள் இராஜாங்க அமைச்சராக இருக்கும் காலப்பகுதிக்குள் இவ் காணிகளை மக்களுக்கு கையளிக்க கூடியதாக மற்றும் விடுவிக்க கூடிய வகையில் காணப்படும் என்பதனை உங்களிடம் நான் கோரிக்கையாக முன்வைக்கின்றேன்.


அமைச்சர் இவ் விடையங்களை இரு கிழமைகளுக்குள் செய்து தருவதாக பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். என தமிழரசிக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad