தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 3D மாடலிங், ரோபோட்டிக் ஆய்வகம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 December 2023

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 3D மாடலிங், ரோபோட்டிக் ஆய்வகம் !

 


தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்பபீடத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம் துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (TIKA) நிறுவன நிதியுதவியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பபீடத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்துறையானது அதிநவீன 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தை நிறுவுவதற்குத்தேவையான அதிநவீன 3D பிரிண்டர், ரோபோடிக் கை உட்பட பல ரோபோடிக் உபகரணங்களை துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (Turkish Cooperation and Coordination Agency -TIKA) நிறுவனத்திடமிருந்து வைபவ ரீதியாகப் பெற்றுக்கொண்டது.  


இந்தக்கையளிப்பு நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், தொழிநுட்பபீட பீடாதிபதி கலாநிதி யூ.எல்.மஜீத், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்துறைத்தலைவர் ஆர்.கே.றிபாய் காரியப்பர், சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் துறைத்தலைவருமான கே.எம்.றிப்தி உட்பட பீடாதிபதிகள், திணைக்களத்தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் TIKA இன் பிரதிநிதிகளான செவ்கி மெர்ட் பாரிஸ், ஜெய்னெப் பைராக் மற்றும் ஓயா துதுன்சு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 



இந்நிகழ்வு மேம்பட்ட தொழிநுட்பத்தின் பௌதீக பரிமாற்றத்தைக்குறித்தது மட்டுமன்றி, கல்வி மற்றும் தொழிநுட்ப முன்னேற்றத்துறையில் இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதை அடையாளப்படுத்துவதாக உபவேந்தர் தனதுரையில் குறிப்பிட்டார். 



மேலும், இந்த நன்கொடையானது பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைகளில் மாற்றியமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார். 



அத்தோடு, பல்கலைக்கழக வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க கதிரவ அமைப்பினை (Solar System)  நிறுவுவதில் TIKA வின் ஆதரவைக்கோரினார், அக்கோரிக்கைக்குப் பதிலளித்த TIKA நிர்வாகிகள், தம்மாலான முழு ஒத்துழைப்புகளையும் வழங்குவோம் என உறுதி பகர்ந்தனர். 

வட்சப் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் TIKA நிறுவனத்திற்குமிடையேயான இல்கூட்டு முயற்சி, இலங்கையில் அறிவியல், தொழிநுட்பக்கல்வியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். 



இவ்வுபகரணங்கள் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நவீன தொழிநுட்பங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, புதுமையான தீர்வுகளை உருவாக்கவும் சவால்களைத் தீர்க்கவும் உதவும். 


இக்கூட்டு முயற்சியின் வெற்றி, இரு நாடுகளுக்குமிடையேயான உறவை மேம்படுத்தவும் இலங்கையில் அறிவியல், தொழிநுட்பத்தின் எதிர்காலத்தை பிரகாசமாக்கவும் உதவுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை என இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


                                         ( நூருல் ஹுதா உமர் )

No comments:

Post a Comment

Post Top Ad