​முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கும் நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 October 2023

​முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கும் நிகழ்வு !


முல்லைத்தீவு மு/ஒட்டுசுட்டான் இ. த. க. வித்தியாலயம், நெடுங்கேனி மு/தண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளில் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் நிகழ்வானது இரு பாடசாலையின் அதிபர்களான வே. நித்தியகலா மற்றும் கு. பஞ்சலிங்கம் அதிபர்களின் தலைமையில் இன்று (14) பாடசாலைகளில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான சி. காந்தன், கோ.சிவானநன், பெ. விவேகானந்தன், எஸ்.சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை கையளித்தனர். 


300ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் குடிநீரில் அதிகமான கல்சியம் காணப்படுவதினால் அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியால் பாடசாலை மாணவர்கள் குடிப்பதற்கான உகந்த நீர் இல்லை என சான்றிதழ் வழங்கியிருந்தார்.

செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 


 அதன் அடிப்படையில் மாணவர்கள் குடிப்பதற்கான நீரினை பெறுவதற்கு இணைந்த கரங்கள் அமைப்பிடம் பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமுகத்தினால் உதவி கோரப்பட்டது. இதன் அடிப்படையில் இணைந்த கரங்கள் அமைப்பின் நன்கொடையாளர் அவுஸ்ரேலியா ராஜ்பவன் உணவக ஊரிமையாளர் ஜெயராஜ் விஸ்வலிங்கம் அவர்களின் குடும்பத்தினர் நிதி அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இன் நிகழ்வில் கிராம சேவகர் லலிதா நிவேகாந்தன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சங்க செயலாளர் கி. ஸ்ரீராமசுந்தரம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சங்க உறுப்பினர் த. நிசாந்தான், பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


                                       ( நூருல் ஹுதா உமர் )

No comments:

Post a Comment

Post Top Ad