"புதிய கிராமம் - புதிய நாடு" தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பதற்காக கடந்த 5,6 ஆகிய இரு தினங்களில் பிரதமர் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
கிழக்கு மாகாண மக்களின் உணவுப் பாதுகாப்புத் திட்ட உறுதிப்பாட்டிற்காக கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான நோக்கின் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தார். அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரதமர் திருகோணமலை, சேருநுவரையில் அமைந்துள்ள கவுந்திஸ்ஸபுர கிராமத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுடன் சந்திப்பை மேற்கொள்வதற்காக அப்பகுதிக்கு கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் சென்றிருந்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன ஆகியோரும் சென்றிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதமர் அவர்கள் நாட்டின் உணவு தேவையை நிவர்த்தி செய்வதற்காக விவசாய நடவடிக்கைகள் ஈடுபடும் விவசாயிகளின் விவசாய செய்கையை ஊக்கப்படுத்துவதற்காக அரசு வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
( எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் )
No comments:
Post a Comment