அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கல்விக்கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையினை இடைநிறுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு முன்னாள் கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் நன்றி தெரிவிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 24 August 2023

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கல்விக்கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையினை இடைநிறுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு முன்னாள் கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் நன்றி தெரிவிப்பு !

 

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கல்விக்கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையினை இடைநிறுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு முன்னாள் கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.


இந்த விடயம் தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் அட்டாளைச்சேனை அல் - இபாதா கலாசார மன்றத்தின் உயர்பீட உறுப்பினர்கள் கடந்த  2023.06.12 ஆம் திகதி கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவர்களை கல்வி அமைச்சில் சந்தித்தனர். 


இச்சந்திப்பின் போது அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை 80 வருட காலமாக தேசிய மட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இலவச கல்வியின் தந்தை Dr. C.W.W. கன்னங்கார அவர்கள் கல்வி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் இக்கல்லூரி உருவாக்கப்பட்டு இன்று வரை அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தேசிய மட்டத்திலும், கிழக்கு மாகாண மட்டத்திலும் கற்பித்தல் பயிற்சி பாடசாலைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.


அன்மையில் கல்வி அமைச்சில் இருந்து அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விஜயம் செய்த கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியுடன்  இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.


நமது நாட்டில் தமிழ் மொழி ஆசிரியர்களை பயிற்சியிப்பதற்காக  அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, கொட்டக்கலை, கோப்பாய் ஆகிய அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசலைகள் இயங்கி வருகின்றன.


கல்வி அமைச்சினால் நமது நாட்டில் இயங்கி வருகின்ற எல்லா தமிழ் மொழி அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளையும் கல்விக்கல்லூரிகளுடன் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால் எங்களுக்கு பிரச்சினை இல்லை. மாறாக 80 வருட காலமாக இயங்கிவரும் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையினை மட்டும் தேசிய கல்விக்கல்லூரியுடன் இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்ட நடவடிக்கையானது மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


இது தொடர்பான விடயங்களை கேட்டறிந்த  கல்வி அமைச்சர் திரு. சுசில் பிரேம் ஜயந்த அவர்கள் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையை அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையினை உடனடியாக இடைநிறுத்துமாறும் இது சம்பந்தமான அறிக்கையினை சமர்பிக்குமாறும்  ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதம ஆணையாளர் திரு. புண்ணியதாச அவர்களுக்கு பணிப்புரைவிடுத்தார். 


இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்ட கல்வி அமைச்சர் திரு. சுசில் பிரேம் ஜயந்த மற்றும் பிரதம ஆணையாளர் திரு. புண்ணியதாசவையும் அண்மையில் கல்வி அமைச்சில் நேரடியாக சந்தித்து (2023.08.07) மக்கள் சார்பாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை நன்றியினை தெரிவித்துக்கொண்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad