முல்லைத்தீவில் திறன்மிகு தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சித்திட்டம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 12 August 2023

முல்லைத்தீவில் திறன்மிகு தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சித்திட்டம் !

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (10) மாவட்ட செயலக அரியாத்தை மண்டபத்தில் நடைபெற்றது. 


இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் அவர் இந் நிகழ்வில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தொழில்முயற்சியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்தும் அதற்க்கான தீர்வு நடவடிக்கைகள் பற்றியும் கலந்தாலோசித்தார்.

செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 

அதனைத் தொடர்ந்து தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.


மேலும் இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. லிங்கேஸ்வரன், தேசிய உற்பத்தித்திறன் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும்  வளவாளர்கள் ,தொழில் முயற்சியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad