பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கடந்த (25.07.2023) காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எம். ஐ. எம். பிர்னாஸ் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன், பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்ட மிடல் பணிப்பாளர், கணக்காளர், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் கல்வி, காணி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் பல்வேறு துறைசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
( சபானா அபூபக்கர் )
No comments:
Post a Comment