மிக நீண்ட காலமாக இழுபறியில் இருந்த மீராவோடை பொதுச் சந்தை அமைச்சர் நஸீர் அஹமட்டின் தலையீட்டால் பொதுமக்களிடம் கையளிக்கப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 July 2023

மிக நீண்ட காலமாக இழுபறியில் இருந்த மீராவோடை பொதுச் சந்தை அமைச்சர் நஸீர் அஹமட்டின் தலையீட்டால் பொதுமக்களிடம் கையளிக்கப்பு !


எமது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கு  பிறகு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நடைபெற்று வந்த மீராவோடை வாராந்த சந்தை எமது பிரதேச அரசியல்வாதியின் தலையீட்டினாலும் வர்த்தக சங்கத்தினாலும் இடைநிறுத்தப்பட்டது.

செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 

இதனால் கல்குடா தொகுதியின் மீராவோடை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு மீராவோடை சந்தைக்குரிய வளங்களும் பாதிக்கப்பட்டிருந்து . அந்தவகையில் கடந்த  12.04.2023 அன்று சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களை பள்ளிவாசல் நிருவாகம் மற்றும் பொது மக்கள் அழைத்து சந்தித்து இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். 


குறிப்பாக, இப்பிரதேசங்களில் பள்ளிவாயலை மையமாகக் கொண்டு சகல விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக பிரதேச அபிவிருத்தி மற்றும் இன்னொரன்னான விடயங்களுக்காக மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயலின் தலைமையில் கீழ் வாராந்த சந்தை இப்பகுதியில் இடம்பெற வேண்டுமென்று கோரிக்கையை அப்பிரதேச மக்கள் பள்ளிவாயல் நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.


அதன் காரணமாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை கிராம சேவகர் பிரிவில் இயங்கி வந்த வாராந்த சந்தையை  மாற்றம் செய்யப்பட்டு மீராவோடை பள்ளிவாசலை சுற்றிய பகுதியில் ஆரம்பம் செய்யப்பட்டதுடன், இன்று 12 புதன்கிழமை அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களினால் இவ்வாராந்த சந்தை  உத்தியோகபூர்வமாக   திறந்து வைக்கப்பட்டு  பொதுமக்கள் பாவனைக்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது.


குறிப்பாக பள்ளிவாயல் நிர்வாகத்தினர், ஊர் மக்களின்,பொது அமைப்புகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து துரிதமாக செயற்பட்ட அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்  அவர்களுக்கு இப்பிரதேச பள்ளிவாயல்கள், ஊர் ஜமாஅத்தார்கள், பொது அமைப்புகள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றார்கள்.


தொடர்ச்சியாக கல்குடா பிரதேசங்களில் அபிவிருத்தி, சமூகம் சார்ந்த பல்வேறுப்பட்ட விடயங்களில் அமைச்சர் தொடர்ச்சியாக அதிக அக்கறை காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.


No comments:

Post a Comment

Post Top Ad