அட்டாளைச்சேனை ஆசிரியர் மீது தாக்குதல்; 2 மாணவர்கள் சீர்திருத்தப் பாடசாலைக்கு, - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 July 2023

அட்டாளைச்சேனை ஆசிரியர் மீது தாக்குதல்; 2 மாணவர்கள் சீர்திருத்தப் பாடசாலைக்கு,


அட்டாளைச்சேனையில் அண்மையில் ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் மாணவர்கள் இருவர் நேற்று (28) அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ஹம்சா அவர்கள் கட்டளை பிறப்பித்தார்.

குறித்த மாணவர்களின் தாக்குதலினால், காயமுற்றுப்பாதிப்புற்ற ஆசிரியர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் தொடுத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெற்றது.

கடந்த 26ஆம் திகதி அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் கற்பிக்கும் ரீ.கோகுலவாசன் என்ற ஆசிரியர் மீது அதே கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களில் , ஒரு மாணவரின் சகோதரர் மற்றும் மற்ற மாணவனின் பெற்றோர் ஆகியோரால் பாடசாலை முடிவடைந்த நேரத்தில் சரமாரியாக தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஆசிரியரின் கண்ணில் காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் குறித்த ஆசிரியரின் மடிகணனி, மோட்டார் வண்டி மற்றும் மூக்குக்கண்ணாடி என்பன சேதமடைந்துள்ளன.

பாடசாலையின் ஒழுக்க கோவையை செயல்படுத்துவதில் ஏற்பட்ட முரண்பாட்டில் இத்தாக்குல் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad