ஒன்றிணைந்த ஆரம்பகல்வி" நூல் வெளியீட்டு விழா ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 11 June 2023

ஒன்றிணைந்த ஆரம்பகல்வி" நூல் வெளியீட்டு விழா !


மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளரும்,நூலாசிரியருமான இராசேந்திரம் வேல்சிவத்தினால் எழுதப்பட்ட  "ஒன்றிணைந்த ஆரம்பகல்வி" நூல் வெளியீட்டு  விழா மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11)காலை மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரெத்தினம் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி,பிள்ளை நலத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் செல்லையா அருள்மொழி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.ஞானரெத்தினம், அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கி.புண்ணியமூர்த்தியும், கௌரவ அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் 

செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 

சி.மனோகரன், மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி, முன்னாள் உப-பீடாதிபதி, விரிவுரையாளர்கள், கல்வியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பயிற்ச்சி மாணவர்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.



இவ்வெளியீட்டு விழாவில் வருகைதந்த அதிதிகளை மாலை அணிவித்து வரவேற்றதுடன்,மங்கள விளக்கேற்றி, இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டதுடன் ,வரவேற்பு நடனம்,ஆசியுரை,தலைமையுரை,நூல் வெளியீடு, நூல்பிரதி வழங்கள், ஆசான்களை கௌரவித்தல், நயவுரை, ஏற்புரை இடம்பெற்று நிகழ்வுகள் முற்றுப்பெற்றது.


No comments:

Post a Comment

Post Top Ad