உலக சுற்றாடல் தினம் - "பிலாஸ்ரிக் மாசுபாட்டுக்கு எதிராக செயற்படுவோம்" எனும் தொனிப்பொருளின் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் நேற்று (05-06-2023) ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகாரசபை,போரதீவுப்பற்று பிரதேசசபை, வெல்லாவெளி பொதுச்சுகாதார வைத்திய அலுவலகமும் இணைந்து பட்டிருப்பு பாலத்தில் இருந்து பெரியபோரதீவு சந்திவரையான 2.5 Km தூரம் வீதி ஓரங்களில் வீசப்பட்ட குப்பைகளை துப்பரவு செய்யும் பனியும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன் மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் உத்தியோகஸ்தர் ம.சதிஸ்குமார் வெல்லாவெளி பொதுச்சுகாதார பரிசோதகர் கு. குபேரன் மற்றும் பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டு பட்டிருப்பு பாலத்தில் இருந்து பெரியபோரதீவு கட்டுரம்பூச்சி சந்தி வரைக்கும் வீதியின் இரு பகுதிகளிலூம் சட்டவிரோதமான முறையில் வீசப்பட்ட குப்பைகளை துப்பரவு செய்யும் பனியில் ஈடுபட்டனர்.
வீதிகளில் கூப்பைகளை வீசுகின்றவர்களுக்கு விளிப்பூட்டலும் வழங்கப்பட்டு வீதியின் இரு பகுதியிலும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிற்று மரக்கன்றுகளும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment