அமைச்சர் நஸீர் அகமட் அவர்களின் முயற்சியினால் பின் தங்கிய கிராமங்களுக்கு குடிநீர் இணைப்புகளை வழங்குவதற்கு துரித நடவடிக்கை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 June 2023

அமைச்சர் நஸீர் அகமட் அவர்களின் முயற்சியினால் பின் தங்கிய கிராமங்களுக்கு குடிநீர் இணைப்புகளை வழங்குவதற்கு துரித நடவடிக்கை !



கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு  பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் பின்தங்கிய பிரதேச மக்களுக்கு தற்போது நிலவும் வறட்சியான காலப்பகுதியில் குடிநீரை பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமாக காணப்படுகின்றது.


 கடந்த மாதம் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ஆராய்ந்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவாக தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.

 அந்த வகையில் பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்வாக தற்போது தியாவட்டவான், பாலை நகர், காகித நகர்,ஹிஜ்ரா நகர்,அமீர் அலி வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பை விரைவுபடுத்தி வழங்குவதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. 


மேற்படி குறிப்பிட்ட பிரதேசங்களை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.முஸம்மில் மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட் அவர்களின் கல்குடா தொகுதி இணைப்பாளர் எம். ஜவாத் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் நேற்று முன்தினம் 12.06.2023 திகதி சென்று பார்வையிட்டனர்.

 

                                    (  எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் ) 


No comments:

Post a Comment

Post Top Ad