மீண்டும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சராக வைத்தியர் F.P.மதன் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 22 May 2023

மீண்டும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சராக வைத்தியர் F.P.மதன் !

​மீண்டும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சராக  வைத்தியர் F.P.மதன் ! 


செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சராக  வைத்தியர் F.Bமதன் அவர்கள் இன்று ( 22.05.2023 )  காலை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்னரும் இவ் வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சராக மிகவும் சிறப்பாக கடமையாற்றி பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு, போதனா வைத்தியசாலைக்கு அடுத்ததாக அதிகளவான மக்கள் பயன்படுத்தும் பெரிய வைத்தியசாலையாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது.


இருந்தபோதிலும் பல்வேறு பட்ட ஆளணி பிரச்சினைகள் இவ் வைத்தியசாலையில் காணப்படுகின்றது. 


இன்றைய தினம் தனது கடமையை பொறுப்பேற்ற வைத்திய அத்தியட்சர் உரையாற்றும்போது  எந்நேரமும் மக்களுக்காக மக்கள் சேவையை இவ் வைத்தியசாலையில்  வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதே போல் தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும்  ஏனைய ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.


                                            ( எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் )

No comments:

Post a Comment

Post Top Ad