மீண்டும் பழைய பெயரில் கொம்பனித்தெரு !
‘கொம்பன்ன வீதி’ என்று அண்மையில் பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்த ‘Slave Island’ (ஸ்லேவ் ஐலண்ட்) என அழைக்கப்படும் கொம்பனித்தெரு (கொழும்பு 02) பிரதேசத்தை அவ்வாறே திருத்தங்கள் இன்றி பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கிராம அலுவலர் வசமிருந்து “கம்பெனி தெரு” என்று அழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 01.12.1992 திகதியிடப்பட்ட 743/5 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலைத் திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் திரு.தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “கொம்பனித்தெருவின் பெயர் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ‘கொம்பன்ன வீதி’ என்று மாற்றப்பட்டாலும் அது தமிழில் கொம்பனித் தெரு என்றே இருக்க வேண்டுமென வலியுறுத்திருந்தார்.
அத்துடன் தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பகுதியில், அவர்கள் நீண்டகாலம் பாவனையில் வைத்திருந்த பெயரை அதிகாரிகள் நினைத்தபடி மாற்றுவது தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment