உள்ளூராட்சி தேர்தல் ; அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த பரிந்துரை !
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த அரச உத்தியோகஸ்தர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தொகுதிக்கு வெளியே வேறு பகுதியில் தற்காலிகமாக பணிகளை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
அதன்படி, அவர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மாகாண ஆளுநர்கள் ஊடாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment