பொத்துவில் பிரதேச செயலக ஏற்பாட்டில் நடமாடும் சேவை −2023
பொத்துவில் பிரதேச செயலக ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை இன்று (2023.05.09) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நடமாடும் சேவையில் தீர்க்கப்படாத காணிப் பிரச்சினைகள், காணி உத்தரவுப்பத்திரங்கள்,அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல், சமுர்த்தி மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குதல், பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவு தொடர்பான விடயங்கள், தொலைந்த தேசிய அடையாள அட்டைக்கான பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதியினைப் பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டைக்கான புதிய விண்ணப்பம், சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட ஆலோசனைகள், உளவளத் துணை ஆலோசனைகள் மற்றும் தொற்று மற்றும் தொற்றா நோய் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் போன்ற பல சேவைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கான காணி உத்தரவுப்பத்திரங்கள்,அளிப்புப் பத்திரங்களை வழங்கிவைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment