பாடப்புத்தகங்கள்/ சீருடைகள் வழங்கும் பணி இன்று ஆரம்பம் !
பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாடசாலை சீருடை வழங்கும் நிகழ்வும் இன்று மருதானை சங்கமித்த வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைகள் குறித்த அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தேவிகா லியனகே தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் விடுமுறைக்கு முன்னதாக இந்த நடவடிக்கைகளை முடிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment