அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் !
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா (பா.உ) தலைமையில் நேற்று (15)அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.ஏ.ஸீ.ஏ சாபிர் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள், தினைக்களத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்க்கமான முடிவுகள்,
ஒலுவில் பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்க்கு காணியினை விடுவித்தல்,
ஒலுவில் அஷ்ரப் நகருக்கான மையவாடிக்கான காணியினை அடையாளப்படுத்தல்,
ஒலுவில் துறைமுக வீட்டுத் திட்ட காணிகளை உரியவர்களுக்கு பெற்றுக் கொடுத்தல்,
பாலமுனை கிராம வீதிகளுக்கு நீர்க்குழாய்கள் பொருத்துதல்,
போன்ற இன்னும் பல முக்கிய விடயங்கள் விடயங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் கெளரவ ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட வீதி மின்விளக்குகளை அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளில் உடனடியாக பொருத்தி முடிக்குமாறு பிரதேச சபை செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.
2014 ம் ஆண்டிற்க்கு பின்னர் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் மூலம் இப் பிரதேச மக்களின் பிரச்சினைகளை அதிகாரத்தில் இருந்தவர்கள் தீர்த்து வைக்கவில்லை என, இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறைப்பட்டுக் கொண்டனர்.
இதன் போது பதிலளித்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா, தான் 2014 ஆம் ஆண்டு விட்ட இடத்திலேயே இப்பிரதேச அபிவிருத்திகள் காணப்படுவதாகவும் இறைவனின் உதவியுடன் மக்களின் பிரச்சினைகளை எதிர்காலத்தில் தீர்க்க தான் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment