நிலநடுக்கம் குறித்து இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை !
இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பை நிச்சயம் பாதிக்கும் என்று கூறிய பேராசிரியர், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஹிம்ச்சல் பகுதிக்கு கீழே அமைந்துள்ள நகரத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கொழும்பில் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் நூற்றில் இருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என்றார்
No comments:
Post a Comment