சுற்றுலாப் பயணிகளின் வருகையில் புதிய சாதனை!. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 December 2022

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் புதிய சாதனை!.


இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


இவ்வருடம் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள்(106,500) வருகை தந்துள்ளனர். முக்கியமாக 20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 108,510 பேர் என்றும் கூறப்படுகிறது.


இந்த வருடத்தில் இதுவரை 78,827 பிரித்தானியப் பிரஜைகளும் 74,713 ரஷ்யப் பிரஜைகளும் இந்த நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad