​இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும், ரஷ்யா பல்கலைக்கழகத்துக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 31 December 2022

​இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும், ரஷ்யா பல்கலைக்கழகத்துக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை!

Ramees Abubakker SEUSL

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும், ரஷ்யா பல்கலைக்கழகத்துக்குமிடையே உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களால் புரிந்துணர்வு உடன்படிக்கை! 


அண்மைக்காலமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர்கல்வியினை சர்வதேச மயப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது. ரஷ்யாவின் UI. Y. Yakovlev Chuvash State Pedagogical பல்கலைக்கழகத்துக்கும், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும்  உடன்படிக்கை நேற்று (29)ஆம் திகதி உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

SEUSL

சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.றியாட் ரூளியின் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ் உடன்படிக்கைக்கான தலைவியும் மற்றும்  ரஷ்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்  பேராசிரியர் ஜனித்த ஏ. லியனகே தலைமையில் நடைபெற்றது. 


ரஷ்யாவின் UI. Y. Yakovlev Chuvash State Pedagogical, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் துறைத்தலைவர்களுக்கிடையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் றமீஸ் அபூபக்கர் அவர்களால் புரிந்துணர்வு உடன்படிக்கையில்  கைச்சாத்திட்டமை குறிப்பிடதக்கது.


உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உரையாற்றுகையில்: புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் கற்றல், கற்பித்தல், ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறைகளில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்களும் பயனடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.


விரிவுரையாளர்கள்-பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள், ஆய்வு மாநாடுகள், ஆய்வு வெளியீடுகள், விரிவுரையாளர்களுக்கு பயிற்சிகள் உள்ளிட்ட பல ஒன்றினைந்த வேலைத் திட்டங்களை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது. 


மிகவிரைவில்  ரஷ்யா, துருக்கி, மலேசியா மற்றும் இந்தியா மற்றும் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் எதிர்வரும் காலங்களில்  மேலும் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இது போன்ற புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்  தெரிவித்தார்.

SEUSL

பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர், எம்.எஸ்.ஏ. றியாட் ரூளி, பதிவாளர் மற்றும் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் உள்ளிட்ட என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad