பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு வீசிய மினி சூறாவளியினால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
கடும் காற்றுடனான வானிலையினால் பல குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து தடைகளும் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பசறை – நமுனுகுல பிரதான வீதி, பிபிலகம – பசறை வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. படல்கும்புர பிரதேச கமேவெல நான்காம் கடை பகுதியில் லயன்குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
லுணுகல – ஜனதாபுர பகுதியில் மின்கம்பம் உடைந்து வீதியில் விழுந்தமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது பசறை – லுணுகல பிரதேசங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment