உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களை வரையறுப்பதற்கான தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு முன்மொழிவுகளை வழங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று 03.12.2022ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம ஆலோசகராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.
ஏனைய அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், உலமாக்கள், ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், பள்ளிவாயல் நிர்வாகிகள், சமூகமட்ட அமைப்புகள், விவசாய அமைப்புகள், கல்விமான்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
வட்டாரங்களை வரையறுத்தல் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணைக்குழு எதிர்பார்க்கும் அம்சங்கள், முன்மொழிவுகள், அனுப்பும் படிமுறை ஒழுங்குகள் தொடர்பாக சிறந்த விளக்கங்கள் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி அவர்களால் சபையோருக்கு வழங்கப்பட்டது.
கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி பிரதேச வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பாக தம்மால் தயாரிக்கப்பட்ட மூன்று முன்மொழிவுகள் சபையோருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இவ்விடயம் சபையோர்து முழுமையான இணக்கப்பாட்டுடன் ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment