நாட்டின் நிலைமையினைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையினை ஆடம்பரங்களின்றியும் வீண் செலவினங்களைக் குறைத்து அதனை வறிய மக்களுக்கான உதவியாக வழங்குமாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆட்பரங்களுக்கு, வானவேடிக்கைகளுக்கு செலவிடும் பணத்தினை ஒரு ஏழைக்கு உணவளிப்பதன் மூலமே கிறிஸ்து எம்மிடம் எதிர்பார்க்கும் பகிர்தலை அடைய முடியுமெனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள ஆயர் இல்லத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
No comments:
Post a Comment