கடும் குளிரின் எதிரொலி - கிளிநொச்சி யில் பல கிராமங்களில் 165 மாடுகள் உயிரிழப்பு. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 9 December 2022

கடும் குளிரின் எதிரொலி - கிளிநொச்சி யில் பல கிராமங்களில் 165 மாடுகள் உயிரிழப்பு.


தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள  கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன. இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது


கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும், நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும்,  பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும், பூநகரியில் 05  மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்தோடு திருவையாறு  கிராமத்தில்  கடும் காற்று காரணமாக மரம்  முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.


கடும் குளிருடன் கூடிய  மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும்.  இன்றுமதியம்(09) வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவிததுள்ள கால்நடை திணைக்களம்  இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad