வென்னப்புவ பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பன்னல, மகதுர பிரதேசத்தில் உள்ள கல்வி வகுப்பை சேர்ந்த 80 மாணவர்கள் சுற்றுலாவின் ஒரு பகுதியாக குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த மாணவன் மாணவர்கள் குழுவுடன் குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment