அரசு அதிகாரிகளின் இலஞ்சம், ஊழல் தொடர்பில் அறிவிக்க குறுகிய தொலைபேசி இலக்கம் அறிமுகம். - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 5 November 2022

அரசு அதிகாரிகளின் இலஞ்சம், ஊழல் தொடர்பில் அறிவிக்க குறுகிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்.


அரசாங்க அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான அனைத்து பொதுமக்களின் முறைப்பாடுகளையும் 1905 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கவும் இன உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று (04ஆம் திகதி) அறிவித்துள்ளது.

இதன்படி, மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பணிபுரியும் குடிமக்கள் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பில் 1905 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.


இந்த முறைப்பாட்டுச் சேவை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மக்களுக்கு கிடைக்கிறது மேலும் முறைப்பாட்டை உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவை நேரடியாக வந்து சந்திக்கவும் முடியும்.


பதிவாளர் நாயகம் திணைக்களம், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள ஓய்வூதிய திணைக்களம் போன்ற நிறுவனங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகளை 1905 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமும் தெரிவிக்கலாம்.


அரசாங்க நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பொதுமக்கள் பிரதிநிதிகள் அல்லது அரச அதிகாரிகள் இலஞ்சம் கோரினால், 1954 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாக அழைப்பதன் மூலம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும். 

No comments:

Post a Comment

Post Top Ad