இலங்கையில் விற்பனை செய்யப்படும் மதுபான போத்தல்களின் மூடியில் ஒட்டுவதற்கு கலால் திணைக்களத்தினால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஸ்டிக்கர் போலியானது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போதே மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த பாதுகாப்பு ஸ்டிக்கர் போலியானது எனவும் அவர் தெரிவித்தார்.
சில கலால் திணைக்கள அதிகாரிகளுக்குத் தெரிந்தே இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாகவும், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மதுபான போத்தல்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர் நிதி அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் கலால் திணைக்களத்தினால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஸ்டிக்கர் அச்சிடும் பணி இந்தியாவில் தடுப்புப்பட்டியலில் உள்ள மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ் (எம்எஸ்பி) என்ற பிரபலமற்ற இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக பலர் குற்றம் சாட்டியதால், திட்டம் தொடங்கப்பட்டபோது சர்ச்சை நிலவியது.
No comments:
Post a Comment