பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அசாதாரணமாக அதிகரிப்பு. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 11 November 2022

பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அசாதாரணமாக அதிகரிப்பு.


பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அசாதாரணமாக அதிகரிப்பு, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை இன்று  வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 285 முதல் 290 ரூபா, ஒரு கிலோ இலங்கை பெரிய வெங்காயத்தின் விலை 340 முதல் 350 ரூபா, ஒரு கிலோ இலங்கை உருளைக்கிழங்கின் விலை 360 முதல் 380 ரூபா, ஒரு கிலோ சீன உருளைக்கிழங்கின் விலை 210 முதல் 220 ரூபா, ஒரு கிலோ பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 180 முதல் 190 ரூபா, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 550 ரூபா, ஒரு கிலோ வெள்ளை உப்பு 380 முதல் 390 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


கொழும்பு கோட்டை மொத்த சந்தையில் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் மேலும் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad