முஸ்லிம் காங்கிரஸின் 30 வது பேராளர் மாநாட்டில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைவர் வேண்டிக் கொண்ட நிலையில் பைஸல் காசிம் மற்றும் தெளபீக் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதில்லையென ஏற்கனவே திட்டமிட்டிருந்த அடிப்படையில் மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்த்தார். இறுதி இரவு கூட ஹரீஸ் எம்.பியிடம் தொலைபேசியில் பேசி ரவூப் ஹக்கீம் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியதுடன் உங்களை கெளரவ படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இருந்த போதும் ஹரீஸ் எம்.பி கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. இருந்த போதிலும் வருகை தந்து கட்சியின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம்.தெளபீக் ஆகியோர் விழா மேடையில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கபட்டனர்.
No comments:
Post a Comment