பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு நவம்பர் 23 முதல் நவம்பர் 29 வரை வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் கம்மன்பில 21 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடியான பங்கு பரிவர்த்தனைக்கு அமைய அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரிய நிலையில் இவ்வனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள சமய நிகழ்வொன்றில் கம்மன்பில ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment