குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினரால் அவிசாவளையைச் சேர்ந்த 45 வயதுடைய குறித்த சந்தேக நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்கள் சிலர், நாடு திரும்பியதன் பின்னர் காவல்துறைக்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஆட்கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு வந்த தருணத்தில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
அவர் நேற்று நீர்கொழும்பு நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் போன்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அவர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment