மேல், சபரகமுவ, வட மேல், ஊவா மற்றும் வட மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்ந்தும் நீடிப்பதன் காரணமாக மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, பதுளை, கண்டி கேகாலை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(02) பிற்பகல் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையுடனான வானிலை காரணமாக விக்டோரியா, மவுசாகலை, காசல்ரீ உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment