கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 18 நாட்களாக தங்கியிருந்து பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற பிக்கு ஒருவர் மஹியங்கனை பிரதேசத்திலுள்ள விகாரையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிக்கு ஓகஸ்ட் 31 முதல் 18 நாட்கள் ஹோட்டலில் தங்கியிருந்தார் என்பதுடன் தொடர்புடைய கட்டணம் 527,820 ரூபா ஆகும். குறித்த கட்டணத்தைச் செலுத்தாமல் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்த அவர், உரிய தொகையை செலுத்துவதாக ஹோட்டலில் தெரிவித்துள்ளார்.
ஆனால் பணத்தை வழங்காததால் ஹோட்டல் நிர்வாகம் பொலிஸில் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment