வேகமாக பயணித்த தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் பத்து பேர் காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (02) காலை 7.30 மணியளவில் ஹட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி மீபிடிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகாமையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இரண்டு பேருந்துகளும் வேகமாகச் செலுத்தப்பட்டதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment