கொடூரமாக எரிக்கப்பட்ட 09 A பெறுபேற்றை பெற்ற மாணவன்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 29 November 2022

கொடூரமாக எரிக்கப்பட்ட 09 A பெறுபேற்றை பெற்ற மாணவன்!

வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்ற அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மாணவன், அப்பகுதியில் உள்ள கும்பலைச் சேர்ந்த ஒருவரால் எரிக்கப்பட்டுள்ளார்.இதனால் குறித்த மாணவன் தற்போது பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த குண்டர், மாணவனை இழுத்துச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அம்பிட்டிய புனித பெனடிக்ட் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இந்தக் குற்றச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியதையடுத்து, கண்டி, அம்பிட்டிய, பல்லேகமவில் வசிக்கும் குறித்த மாணவன், தனது சிறந்த பெறுபேறுகளை தனது பாட்டியிடம் தெரிவிக்க நேற்று (26ஆம் திகதி) இரவு தனது தந்தையுடன் சென்றுள்ளார்.


இவ்வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், தீ வைத்த நபரை அடையாளம் காண முடியவில்லை என மாணவனின் தந்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். கழுத்தில் இருந்து முற்றாக எரிந்த நிலையில் மாணவனுக்கு இன்று (28) காலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


எவ்வாறாயினும், இந்தக் குற்றத்தைச் செய்தவர் அப்பகுதியில் நன்கு அறியப்பட்டவர் என்பதும், குற்றம் வெளிப்பட்டால் முழு குடும்பத்தையும் அழித்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய போது தெரியவந்துள்ளது.


அம்பிட்டிய பிரதேசத்தை பயமுறுத்தும் குண்டர் கும்பலின் உறுப்பினர்கள் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டதாக உள்ளூர்வாசிகள் கூறினாலும், காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாவனையாளர்களும் அம்பிட்டிய மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களை சில காலமாக பயமுறுத்தி மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.


அடையாளம் காணப்பட்ட நபர் இது தொடர்பில் கண்டி பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க தெரிவிக்கையில், குற்றத்தை செய்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


கண்டி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கூறுகையில், இச்சம்பவத்தின் சந்தேக நபர் இதற்கு முன்னர் அம்பிட்டிய பிரதேசத்தில் சிலுவையில் ஆணி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என தகவல் கிடைத்துள்ளது. 


சந்தேகத்திற்குரிய குற்றவாளி அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார், ஆனால் அவர் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad