கோதுமை மா இறக்குமதி தொடர்பிலான வர்த்தமானி இன்று வெளியிடப்படும். - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 25 October 2022

கோதுமை மா இறக்குமதி தொடர்பிலான வர்த்தமானி இன்று வெளியிடப்படும்.

திறந்த கணக்குகளின் கீழ் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதுடன், வர்த்தமானி அறிவித்தலுடன் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு அமைச்சின் பாதுகாப்பு செயலாளர் எஸ்.டி. கொடிகார தெரிவித்துள்ளார்.


இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரினால் வர்த்தமானி வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


ஒரு கிலோ மாவின் விலையை 250 ரூபா அல்லது அதற்கும் குறைவாக குறைத்தால், பாணின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad