Image Source: www.army.lk |
நேற்று (14) வரகாபொல, அகுருவெல்ல தும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் மண்மேட்டின் கீழ் புதைந்த நிலையில் காணப்பட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களை மீட்க பாதுகாப்புப் படையினரும், அப்பகுதி மக்களும் கடுமையாகப் போராடினர். காயமடைந்த தந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தாய் மற்றும் மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்று (15) காலை வரை மீட்புப் பணிகள் தொடர்ந்தன. வீட்டில் இருந்த இன்னொரு குழந்தை, புலமைபரிசில் மேலதிக வகுப்புக்கு சென்றிருந்ததால் விபத்தில் சிக்கவில்லை.
No comments:
Post a Comment