எவ்வாறாயினும், டீசல் விலை குறைப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார். பஸ் கட்டணத்தை குறைக்க டீசல் விலை 4% அல்லது அதற்கு மேல் குறைக்கப்பட வேண்டும் என்று கூறிய டாக்டர் நிலான் மிராண்டா, தற்போதைய விலை குறைப்பு தேவையான 4% ஐ விட குறைவாக உள்ளது என்றார்.
இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோலின் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமாயின் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என சுதில் ஜயருக் சுட்டிக்காட்டினார். தற்போது வாராந்தம் வழங்கப்படும் 5 லீற்றர் எரிபொருளை நாளாந்த அடிப்படையில் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment