வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுக்கு வன்னி ஹோப் நிறுவனத்தினால் நிரந்தர வீடு வழங்கி வைப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 October 2022

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுக்கு வன்னி ஹோப் நிறுவனத்தினால் நிரந்தர வீடு வழங்கி வைப்பு !

வறுமைக் கோட்டின் கீழ் வாழும்  குடும்பம் ஒன்றுக்கு வன்னி ஹோப் நிறுவனத்தினால் நிரந்தர வீடு வழங்கி வைப்பு, வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி ஹோப் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் கனடா நாட்டில் வசிக்கும் யசோ மற்றும் தேவ் அவர்களின்  நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பத்திற்கு நிரந்தர வீட்டை நிர்மாணித்து அவற்றினை பயனாளிக்கு கையளிக்கும் நிகழ்வு மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.டி.எம். பாரிஸ் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருகோணமலை மூதூர்  பிரதேச செயலகத்திற்குட்பட்ட சம்பூர்  எனும் பின்தங்கிய கிராமத்தில் வசிக்கின்ற  மிக நீண்டகாலம் மண் குடிசைகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வந்த கனவனை இழந்த ரதிகலா எனும் பெண் தலைமை தாங்கும் குடும்பத்திற்கே இந்த நிரந்தர வீடு நிர்மாணிக்கப்பட்டது.  


அதே போன்று குறித்த குடும்பத்தில் கல்வி பயிலுகின்ற துவாராக எனும் மாணவி வன்னி ஹோப் நிறுவனத்தின் புலமைப் பரிசில் திட்ட அனுசரணையில் 04 வருடங்களாக புலமைப் பரிசில் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் வன்னி ஹோப் அவுஸ்திரேலியா மற்றும் மக்கள் சேவை மன்ற உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad